கனடா மந்திரி சபையில் இந்திய வம்சாவளி பெண்கள் இருவருக்கு வாய்ப்பு

கனடா புதிய மந்திரிசபையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.;

Update:2025-03-16 09:03 IST
கனடா  மந்திரி சபையில் இந்திய வம்சாவளி பெண்கள் இருவருக்கு வாய்ப்பு

ஒட்டவா,

கனடாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பியதுடன், அவருக்கு ஆதரவு அளித்து வந்த என்.டி.பி. கட்சியும் தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. இதையடுத்து அவருக்கு நெருக்கடி அதிகரித்தது.

மேலும், அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில், லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்த ட்ரூடோ, கடந்த ஜனவரி மாதம் 7ஆம் தேதி கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். என்றாலும், அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும்வரை தொடர்ந்து பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டது இதையடுத்து லிபரல் கட்சி தலைவராக மார்க் கார்னி சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். கனடாவின் புதிய பிரதமராகவும் தேர்வு செய்யப்பட்டார். அவர் கனடாவின் 24வது பிரதமராக பொறுப்பேற்றார்.

அதேநேரத்தில், கனடா புதிய மந்திரிசபையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் டெல்லியில் கமல் கேராவும் ஒருவர். இந்தோ - கனடாவை சேர்ந்த அனிதா ஆனந்த் மற்றும் டெல்லியில் பிறந்த கமல் கேரா ஆகியோர் பிரதமர் மார்க் கார்னியின் மந்திரி சபையில் சேர்க்கபட்டுள்ளனர். 58 வயதான அனிதா ஆனந்த புதுமை, அறிவியல் மற்றும் தொழில்துறை மந்திரியாகவும், 36 வயதான கமல் கேரா சுகாதார மந்திரியாகவும் உள்ளனர். டெல்லியில் பிறந்த கமல் கேராவின் குடும்பம் அவர் பள்ளியில் படிக்கும்போதே கனடாவுக்கு குடிபெயர்ந்தது. பின்னர் அவர் டொராண்டோவின் யார்க் பல்கலைக்கழகத்தில் கேரா இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்