மோசமான வானிலை காரணமாக ஜப்பான் செல்லும் விமானம் ரத்து - ஏர் இந்தியா அறிவிப்பு

டெல்லியில் இருந்து ஜப்பானின் நரிட்டா நகருக்கு செல்லும் விமானம் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

Update: 2024-08-15 16:39 GMT

புதுடெல்லி,

ஜப்பானில் உள்ள நரிட்டா நகருக்கு டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டோக்கியோ வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையை தொடர்ந்து டெல்லி-நரிட்டா விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் இன்று (15.08.2024) அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மோசமான வானிலை எச்சரிக்கை காரணமாக டெல்லி-நரிட்டா-டெல்லி வழித்தடத்தில் நாளை (16.08.2024) ஏ.ஐ. 306 மற்றும் ஏ.ஐ. 307 ஆகிய விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

ஆகஸ்ட் 16-ந்தேதி டெல்லி-நரிட்டா வழித்தட விமானங்களில் முன்பதிவு செய்த பயணிகள் மறுபயணம் மேற்கொள்வதற்கான டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும். மேலும் விமான சேவை ரத்து செய்யப்பட்டதற்கான முழு பணம் திரும்பி வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்