ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.7 ஆக பதிவு

ஜப்பானில் இன்று ரிக்டர் 5.7 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update:2024-06-25 15:40 IST

டோக்கியோ,

ஜப்பானில் உள்ள ஹான்ஷு தீவின் கிழக்கு கடற்கரை பகுதி அருகே இன்று காலை 8.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளதாக ஜெர்மானிய புவி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்