டென்மார்க்கில் இஸ்ரேல் தூதரகம் அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்பு
டென்மார்க்கில் இஸ்ரேல் தூதரகம் அருகே அடுத்தடுத்து 2 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
கோபன்ஹேகன்,
கடந்த ஆண்டு பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பலரை பணய கைதிகளாக காசாவிற்கு கடத்தி செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பு மீது போர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ள கட்டிடத்தின் அருகே நேற்று அடுத்தடுத்து 2 முறை குண்டுவெடிப்பு ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. சம்பவ இடத்தில் போலீசார், ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அண்டை நாடான ஸ்வீடனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.