தைவான் எல்லைக்குள் பறந்த 30-க்கும் மேற்பட்ட சீன போர் விமானங்கள்
சீனாவின் அத்துமீறல் செயலுக்கு தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
தைபே நகரம்,
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாக பிரிந்தது. ஆனால் தைவான் தனது நாட்டின் ஒரு அங்கம் என சீனா கருதுகிறது. எனவே அதனை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடிக்கிறது. அதன் ஒருபகுதியாக தைவான் எல்லையில் அடிக்கடி போர்ப்பயிற்சி நடத்தி சீனா பதற்றத்தை ஏற்படுத்துகின்றது.
அதன்படி சீனாவுக்கு சொந்தமான 6 போர்க்கப்பல்கள் மற்றும் 37 விமானங்கள் தைவான் எல்லையில் கண்டறியப்பட்டன. அவற்றில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் எல்லைக் கோட்டை கடந்து தங்களது வான்பகுதியில் பறந்து சென்றதாக தைவான் ராணுவம் கூறியுள்ளது.
எனவே சீனாவின் இந்த அத்துமீறலுக்கு தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த ஆத்திரமூட்டும் செயலுக்கு தைவான் அதிபர் லாய் சிங்-தே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.