மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது

Update:2024-11-30 00:34 IST
Live Updates - Page 3
2024-11-30 09:34 GMT

கனமழை காரணமாக சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை மழை நீர் சூழ்ந்துள்ளது. 

2024-11-30 08:44 GMT

தண்டவாளத்தில் மழை நீர் - மின்சார ரெயில்கள் தற்காலிகமாக நிறுத்தம்

சென்னை பல்லாவரத்தில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதால் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயில்கள் 2 மணி நேரம் வரை பல்லாவரத்திலேயே நிறுத்தப்பட்டு உள்ளன.  மழைநீரை அகற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

2024-11-30 08:36 GMT

பெஞ்சல் புயல் கரையை கடக்கும் இடம் மாறியது

மரக்காணத்திற்கு அருகே பெஞ்சல் புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே பெஞ்சல் புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டது. பெஞ்சல் புயல் காரணமாக வடதமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பெஞ்சல் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

2024-11-30 08:15 GMT

சென்னைக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

2024-11-30 07:57 GMT

சென்னைக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

2024-11-30 07:53 GMT

பெஞ்சல் புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

2024-11-30 07:53 GMT

தூத்துக்குடியில் 6 மீனவர்கள் கடலில் தத்தளிப்பு

தூத்துக்குடி அருகே திரேஸ்புரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 6 மீனவர்கள் கடலில் தத்தளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நடுக்கடலில் படகு பழுதாகி தத்தளித்து வரும் மீனவர்களை மீட்க உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 26-ம் தேதி கரை திரும்ப வேண்டிய மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

2024-11-30 07:43 GMT

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை வெளுத்துவாங்கி வருகிறது. காற்றுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

2024-11-30 07:38 GMT



சென்னையில் தொடர்ந்து பெய்து வரும்கனமழையால் கொரட்டூரில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மோட்டார்கள் மூலம் மழைநீரை அகற்றும்பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்தித்தர பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

2024-11-30 07:33 GMT

கனமழை எதிரொலியாக அம்மா உணவகங்களில் இன்று ஒருநாள் முழுவதும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்