'கலைஞர் நிறைந்திருக்கும் இடமெல்லாம் ஹனிபாவும் இருப்பார்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

'இசை முரசு' ஹனிபா காலங்கள் கடந்து வாழ்வார் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2024-12-25 10:03 GMT

சென்னை,

'இசை முரசு' நாகூர் ஈ.எம். ஹனிபாவின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. மூத்த அமைச்சர்கள் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"கழகத்தின் கம்பீரக் குரல் 'இசை முரசு' நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டில் அவரைப் போற்றுவோம்! எல்லோரும் கொண்டாடுவோம்! தலைவர் கலைஞரின் நண்பரும், ஆருயிர் சகோதரருமான 'இசை முரசு' ஹனிபா காலங்கள் கடந்து வாழ்வார்! கலைஞர் நிறைந்திருக்கும் இடமெல்லாம் ஹனிபாவும் இருப்பார்!"

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்