தவெக மாநாடு:அலங்கரிக்கும் விடுதலை போராட்ட வீரர்கள், தலைவர்களின் கட் அவுட்கள்

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் மூன்று தலைவர்கள் மத்தியில் விஜய்யின் கட் அவுட் இடம்பெற்றுள்ளது.

Update: 2024-10-25 11:38 GMT

சென்னை,

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார். இதற்காக கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விஜய் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நாளை மறுநாள் நடக்கிறது. மாநாட்டிற்கு நாளை ஒருநாளே உள்ள நிலையில், மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திடலில் தொண்டர்கள் அமரும் வகையில்75 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. 4 பகுதியாக பிரிக்கப்பட்டு இருக்கைகள் போடப்பட்டுள்ளது. மாநாடு திடலினுள் பார்வையாளர்கள் வசதிக்காக 300 மொபைல் கழி வறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாற்றுதிறனாளிகளுக்காக தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

தலைவர்கள் கட்-அவுட் மாநாடு மைதானத்தில் தமிழன்னை, சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேலு நாச்சியார், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலை அம்மாள் மற்றும் சேரன். சோழன், பாண்டிய மன்னர்கள், அரசியல் தலைவர்கள் காமராஜர், பெரியார் மற்றும் அம்பேத்கர், கட்சித் தலைவர் விஜய் ஆகியோரது கட் அவுட்கள் மேடையின் இருபுறமும் வைக்கப்பட்டு உள்ளன. திடலில் மூன்று தலைவர்கள் மத்தியில் விஜய்யின் கட் அவுட் இடம்பெற்றுள்ளது.



மாநாட்டுத்திடலின் முகப்பில் ராஜராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை, பூலித்தேவன், மருது சகோதரர்கள், ஒண்டிவீரன், அழகு முத்துக்கோன், பெரும்பிடுகு முத்தரையர் ஆகிய கட் அவுட்கள் இடம்பெற்றுள்ளன.



 தமிழகத்தில் இருக்கும் எந்த அரசியல் கட்சிகளும் மாநாடு வைத்தால் அதில் தலைவர்கள் கட் அவுட் மட்டுமே இடம்பெறும். பெண் தலைவர்களின் கட் அவுட்கள் இடம்பெற்றதில்லை. இந்தநிலையில் விடுதலைக்காக பாடுபட்ட பெண் தலைவர்களான வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் கட் அவுட்கள் தவெக மாநாட்டில் இடம்பெற்றுள்ளது.



மேலும் மாநாடு திடலில் மின்விளக்குகளை பொருத்தும் இறுதி கட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 15ஆயிரம் எல்இடி மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளன.


தவெக மாநாட்டு திடலில் அதிகளவு பொதுமக்கள் கூட உள்ளதால் தற்காலிக மொபைல் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டில், 100 அடிக்கு வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் கட்சியின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் ஏற்றுகிறார். அதன்படி, 27ம் தேதி மாலை 4 மணி விஜய் கொடியை ஏற்றி தனது உரையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மாநாடு நடைபெறும் வி.சாலையில் 100 அடி உயர கொடிக்கம்பம் பொருத்தப்பட்டு கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது.


மாநாட்டிற்கு வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில் 6 ஆயிரம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் விஜய் ரசிகர்கள் 10 ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை மாநாடு திடலில் நடைபெறும் பணிகளை பார்வையிட்ட மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறுகையில், 'தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டில் பங்கேற் பவர்கள் நலனுக்காக கண்காணிப்பு கேமரா குடிநீர், கழிப்பிட மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது. மாநாடு சிறப்பாக நடைபெறும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்