குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்.. அருவிகளில் ஆனந்த குளியல்
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சீராக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
தென்காசி,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இரண்டு வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கம்பிகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு சேதம் அடைந்தது. இதையடுத்து அருவி பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது அனைத்து அருவிகளிலும் சீராக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. தண்ணீர் சீராக விழுந்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர். விடுமுறை தினம் என்பதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.