இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-01-2025

Update:2025-01-16 09:17 IST
Live Updates - Page 2
2025-01-16 11:28 GMT

இருவேறு சம்பவங்களில் காளை முட்டி 2 பேர் பலி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செந்தாரப்பட்டியில் எருதாட்டம் நிகழ்ச்சியில் காளை முட்டியதில் சாலையோரம் நடந்து சென்ற தொழிலாளி மணிவேல்(43) உயிரிழந்தார். அனுமதியின்றி நடத்தப்பட்ட விழாவை வருவாய் துறை மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இராட்சண்டர்திருமலை ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பலத்த காயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பார்வையாளர் குழந்தைவேலு(67) உயிரிழந்தார். 

2025-01-16 10:55 GMT

அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என இதுவரை சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர். 10 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

2025-01-16 10:36 GMT

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 8-வது சுற்று தொடக்கம்

புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 7 சுற்றுகள் நிறைவடைந்து 8-வது சுற்று தொடங்கியது. 

2025-01-16 09:03 GMT

டெல்லி நோக்கி மீண்டும் பேரணி.. தயாராகும் விவசாயிகள்

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21-ம் தேதி ஷம்பு எல்லையில் இருந்து 101 விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியை தொடங்க உள்ளதாக விவசாய சங்க தலைவர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு டிசம்பர் 6, டிசம்பர் 8 மற்றும் டிசம்பர் 14 என மூன்று முறை ஷம்பு எல்லையில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது அவர்களை அரியானா போலீசார் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

2025-01-16 08:24 GMT

டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், ரூ.500-க்கு சமையல் கியாஸ் சிலிண்டர், இலவச ரேசன் பொருட்கள் மற்றும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்து உள்ளது.

2025-01-16 07:44 GMT

விண்ணில் செயற்கைக்கோள்களை இணைக்கும் இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றது பற்றி இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறும்போது, நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த சாதனையை செய்து முடித்த ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துகள் என தெரிவித்து கொண்டார்.  இந்த திட்டத்தின் வெற்றியானது, சந்திரயான்-4 திட்டத்திற்கு நிறைய உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2025-01-16 07:13 GMT

ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து

விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைக்கும் இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றியடைந்ததை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

2025-01-16 06:50 GMT

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 6 மாடுபிடி வீரர்கள், 4 காளை உரிமையாளர்கள் மற்றும் 3 பார்வையாளர்கள் என 13 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்