இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-02-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரி டெல்லி ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார்.
தனது எக்ஸ் வலைதளப்பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்டாவில் திரிஷா பதிவிட்டுள்ளார்.
‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை' பெயர் பலகையை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். நுங்கம்பாக்கத்தில் உள்ள காம்தார் நகர் முதல் தெருவிற்கு 'எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை' எனப் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபடியாவுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பி உள்ளது.
அரியானா சட்டப்பேரவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்யக் கோரிய காங்கிரஸ் தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தவெகவில் சிறுவர் அணி, பெண்கள் அணி, திருநங்கைகள் பிரிவு, காலநிலை ஆய்வு பிரிவு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பிரிவு என மொத்தம் 28 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மூணாறில் சுற்றுலா பயணிகளுக்காக புதிய டபுள் டெக்கர் பேருந்து சேவையை தொடங்கியது கேரள அரசு. கண்ணாடி பலகைகளால் ஆன இந்த 'ராயல் வியூ' பேருந்தின் மேல் தளத்தில் 38 பேரும், கீழ் தளத்தில் 12 பேரும் அமரலாம். இது சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என கேரள போக்குவரத்துத் துறை மந்திரி கணேஷ் குமார் தெரிவித்துள்ளார்.