ஜன. 10-ம் தேதியே மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட வாய்ப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10-ம் தேதியே மகளிர் உரிமைத் தொகை வரவுவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக 15-ம் தேதி வழங்கப்படும் நிலையில் பொங்கல் விழாவுக்கு தயாராகும் வகையில் முன்கூட்டியே வரவு வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா - பகல் பத்து 10-ம் நாள் உற்சவம்
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் பகல் பத்து 10-ம் நாள் உற்சவம் நடந்து வருகிறது. இதில், மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு நம்பெருமாள் அருள்பாலித்துள்ளார். அவரை காண்பதற்காக வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா ரங்கா என கோஷமிட்டபடி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் மீனவர்கள் 10 பேர் கைது
இலங்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. காரைக்கால் மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளது.