இரட்டை இலை - தேர்தல் ஆணையம் முடிவெடுக்க தடை
இரட்டை இலை தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
தந்தை பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியதை கண்டித்து சென்னையில் அவரது வீட்டை முற்றுகையிட முயன்ற தபெதிகவினரை போலீசார் கைது செய்தனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ.. வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஜோ பைடன்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்சில் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர். காட்டுத் தீயை அணைப்பதில் கவனம் செலுத்துவதற்காக ஜனாதிபதி ஜோ பைடன் தனது இத்தாலி பயணத்தை ரத்து செய்துள்ளார்.
ஜோ பைடன் இன்று மாலையில் ரோம் மற்றும் வாடிகன் நகருக்கு புறப்பட திட்டமிட்டிருந்தார். இது அவரது ஜனாதிபதி பதவிக் காலத்தில் மேற்கொள்ளும் கடைசி வெளிநாட்டுப் பயணமாகும்.
கிரிக்கெட் வீரர் மார்டின் குப்தில் ஓய்வு அறிவிப்பு
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்டின் குப்தில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவித்துள்ளார்.
தலைவர்களை கொச்சைப்படுத்துவது சரியல்ல - அமைச்சர் சேகர் பாபு
வாழ்ந்து மறைந்த பெரிய தலைவர்களை சீமான் கொச்சைப்படுத்துவது சரியல்ல, தலைவர்களை கொச்சைப்படுத்தினால் தன் பெயர் அடையாளப்படும் என செய்கிறார். கரைந்து கொண்டிருக்கும் இயக்கமாக சீமானின் இயக்கம் மாறிக்கொண்டிருக்கிறது என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழக சட்டசபையின் 4-ம் நாள் கூட்டம் தொடக்கம்
தமிழக சட்டசபையின் 4-ம் நாள் கூட்டம் தொடங்கியுள்ளது. இதில், யு.ஜி.சி.க்கு எதிராக தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வர இருக்கிறார்.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கி திட்டத்தினை இன்று தொடங்கி வைத்துள்ளார். இதன்படி, 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் பொங்கல் பரிசு தொகுப்பில், 1 முழு கரும்பு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை ஆகியவை வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி, சேலையும் சேர்த்து வழங்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் இன்றும், நாளையும் நின்று செல்லும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
கூட்ட நெரிசலில் 6 பேர் பலி - மு.க.ஸ்டாலின் இரங்கல்
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியான சம்பவத்தை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.