தாமிரபரணி அற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக தாமிரபரணி ஆற்றில் குறுக்குத்துறை முருகன் கோவில் மூழ்கியுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் 5 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் குறுக்குத்துறை பகுதியை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறுக்குத்துறை பகுதியில் மின் கம்பங்களை வெள்ளம் அடித்து சென்றுள்ளது. குறுக்குத்துறை முருகன் கோவிலுக்கு மக்கள் செல்ல தடை விதித்து தற்காலிக தடுப்புகளை போலீசார் அமைத்துள்ளனர்.
வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூண்டி ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு
- திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு
- வினாடிக்கு 16 ஆயிரத்து 500 கனஅடி நீர் வெளியேற்றம்
- பூண்டி ஏரிக்கு 15,500 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது
- 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்
நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தின் 23-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தாக்குதலில் உயிரிழந்த 9 பேரின் புகைப்படங்களுக்கு துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்