இன்று தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது.;
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை அண்மையில் தொடங்கினார். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக். 27ம் தேதி பிரமாண்டமாக நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் இன்று தவெக கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெறும். இதில் மாவட்ட செயலாளர்கள் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
காலை 10 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் நியமனத்திற்குப் பிறகு, கழகத்தின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு குறித்தும் ஆலோசனை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.