கருணாநிதி வசனம், கவிதை ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் பரிசு வழங்கினார்

கருணாநிதி வசனம்,கவிதை ஒப்பித்தல் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி பரிசு வழங்கினார்.;

Update:2025-02-08 15:30 IST

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (8.2.2025) காலை, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில்;

தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை சார்பில் கலைஞர் நூற்றாண்டினையொட்டி நடத்திய "கருணாநிதி வசனம்/கவிதை ஒப்பித்தல் போட்டி"யில் மாநில அளவில் முதல் பரிசு பெற்ற மதுரை, அரசு நடுநிலைப் பள்ளி 4ஆம் வகுப்பு பயிலும் செல்வி மா.ஜாக்ஷிக்காவிக்கு ரொக்கப் பரிசாக ரூ.50,000மும் - இரண்டாம் பரிசு பெற்ற புதுக்கோட்டை இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு பயிலும் செல்வி கு.மதிவதனிக்கு ரொக்கப் பரிசாக ரூ.30,000மும் – மூன்றாம் பரிசு பெற்ற சென்னை, சைதாப்பேட்டை, பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செல்வன் சா.இஜாஸ்அகமதுக்கு ரொக்கப் பரிசாக ரூ.25,000மும் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின்போது கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, மாநில கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை தலைவர் வாகை சந்திரசேகர் – செயலாளர் கலைமாமணி இறையன்பன் குத்தூஸ், துணைச் செயலாளர்கள் திருச்சி எழில்மாறன் செல்வேந்திரன், மதுரை சி.வீரகணேசன், அ.ஜாகிர்உசேன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்