தஞ்சாவூர் சாலை விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-11-26 07:07 GMT

தஞ்சாவூர்,

தஞ்சாவூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளதுடன் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

"திருவாரூர் மாவட்டம், தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தைச் சேர்ந்த 42 நபர்கள் விவசாய நடவுப் பணியை முடித்துவிட்டு மினி லாரியில் நேற்று மாலை வீடு திரும்பும்போது எதிர்பாராதவிதமாக வாகனம் கவிழ்ந்த விபத்தில், அதில் பயணம் செய்த துர்கையம்மாள் (வயது 60) க/பெ.சுப்பரமணியன் என்ற பெண்மணி பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையுமடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவரின் உறவினர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்