பூந்தமல்லி: செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 43 வெளிமாநிலத்தவர்கள் மீட்பு
பூந்தமல்லி அருகே பாரிவாக்கத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 43 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.;

பூந்தமல்லி,
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே பாரிவாக்கத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த ஒடிசாவைச் சேர்ந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளி மாநிலத்திலிருந்து கொத்தடிமைகளாக வேலைக்கு அழைத்து வரப்பட்டு சம்பளம் தராமல் வேலை வாங்கி வந்த நிலையில், மின்னஞ்சல் மூலம் வந்த புகாரின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.