ஈரோடு அருகே நச்சு வாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

ஈரோடு அருகே ஆசிட் ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரியை சுத்தம் செய்யும்போது மயங்கி விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.;

Update:2025-03-30 12:12 IST
ஈரோடு அருகே நச்சு வாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பவானி அருகே லட்சுமி நகர் அடுத்துள்ள கோண வாய்க்கால் பகுதியில் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு போரிக் ஆசிட் டேங்கர் லாரி ஒன்று தூய்மைப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டிருந்தது.

இந்தநிலையில், ஊழியர்களான யுவனேந்தல் (55), சக்திவேல் (52) செல்லப்பன் (52) ஆகியோர் டேங்கர் லாரியை சுத்தம் செய்ய முயன்ற நிலையில் மூவரும் திடீரென மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்தது தெரியவந்தது.

மூன்றாவது நபர் தற்பொழுது பவானி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பவானி நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்