திறந்தவெளியில் மலம் கழித்தால் அபராதம் வசூலிக்க முடிவு

தனிநபர் கழிப்பிடத்தையோ, பொது கழிப்பிடத்தையோ பொதுமக்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2024-10-28 06:24 GMT

நெல்லை,

நெல்லை மாவட்ட பேரூராட்சி பகுதிகளில் பொது இடங்களில் சிறுநீர், மலம் கழித்தால் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நாங்குநேரி மற்றும் வடக்கு வள்ளியூர் பேரூராட்சியில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் 100 ரூபாயும், திறந்தவெளியில் மலம் கழித்தால் 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனிநபர் கழிப்பிடத்தையோ, பொது கழிப்பிடத்தையோ பொதுமக்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்