சென்னையில் மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல் இயக்கம்
மெட்ரோ ரெயில் சேவையினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.;
சென்னை,
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த பெஞ்சல் புயல் தற்போது புதுவைக்கு அருகே கரையை கடந்து வருகிறது. இதனால் புதுவை, மரக்காணம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. முன்னதாக நள்ளிரவு முதல் மதியம் வரை சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் ரெயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியதால் மின்சார ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருவதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எந்த இடையூறுமின்றி இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் சேவையினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.