ஈரோடு ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: ரெயில் சேவைகளில் மாற்றம்

பராமரிப்பு பணி காரணமாக திருச்சியில் இருந்து செல்லும் ரெயில் மார்ச் 28 அன்று மட்டும் கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.;

Update:2025-03-26 16:06 IST
ஈரோடு ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: ரெயில் சேவைகளில் மாற்றம்

கோப்புப்படம்

ஈரோடு ரெயில் நிலையத்தில் தடம் புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

திருச்சியில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56809) காலை 2.20 மணியளவில் திருச்சியில் இருந்து புறப்படும். இந்த ரெயில் வருகிற மார்ச் 28 அன்று கரூர் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். அன்று கரூர் சந்திப்பு முதல் ஈரோடு சந்திப்பு வரை ரெயில் இயக்கப்படாது.

ஈரோட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு செங்கோட்டை புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16845) வருகிற மார்ச் 28 அன்று கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.05 மணியளவில் இந்த ரெயில் இயக்கப்படும்.

செங்கோட்டையில் இருந்து அதிகாலை 5.10 மணிக்கு ஈரோட்டிற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16846) வருகிற மார்ச் 28 அன்று செங்கோட்டையில் இருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். என தெரிவிக்கப்படுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்