மதுரையில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய பூசாரி போக்சோவில் கைது

மதுரையில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய பூசாரியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-11-09 01:28 GMT

மதுரை,

மதுரை புறநகர் பகுதியை சேர்ந்த தம்பதியின் 17 வயது மகள், அங்குள்ள உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால், பெற்றோர் ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது அந்த மாணவி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து மாணவியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கண்ணனேந்தல் பகுதியைச் சேர்ந்த கோவில் பூசாரி ஒருவர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து அவரை கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த பூசாரியை பிடித்து விசாரித்தனர். கண்ணனேந்தல் பகுதியை சேர்ந்த 45 வயதான சசிக்குமார், ஆட்டோ டிரைவராக இருந்து பின்னர் அந்த பகுதியில் கோவிலை அமைத்து அதன் நிர்வாகியாகவும், பூசாரியாகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், மாணவியின் வறுமையை பயன்படுத்தி படிப்புக்கு பண உதவி செய்வதாக கூறி கோவிலுக்கு அழைத்துள்ளார். விடுமுறை நாட்களில் கோவிலுக்குச் சென்ற மாணவியை கோவிலை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய வைத்துள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்திய அவர், மாணவியை கர்ப்பமாகியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மாணவியை கர்ப்பமாக்கிய பூசாரியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்