சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் கண்காணிப்பு நடவடிக்கை குறித்து உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்

Update: 2024-10-15 05:19 GMT

சென்னை,

தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், சில இடங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை, மயிலாப்பூர், மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இன்று கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் கண்காணிப்பு நடவடிக்கை குறித்து அவர் ஆய்வு செய்தார்.அவருடன் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோரும் ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்