திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஐஐடி குழு ஆய்வு
திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஐஐடி குழு ஆய்வு செய்து வருகின்றனர்.;
திருவண்ணாமலை,
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் அங்கு மூன்று இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. அதில் வ.உ.சி. நகரில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி வீடு புதைந்ததில் அங்கு வசித்து வந்த 7 பேரில் 6 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டுள்ள நிலையில் 2 குழந்தைகளின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சென்னை ஐஐடியை சேர்ந்த மண் பரிசோதனை நிபுணர்கள் நரசிம்மராவ் மோகன், பூமிநாதன் ஆகாஷ் உள்ளிட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த மண்சரிவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து குழு சோதனை செய்து வருகின்றனர். இவர்களின் அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.