கனமழை புகார்: உதவி எண்களை அறிவித்த சென்னை மாநகராட்சி

கனமழை புகார் தொடர்பாக சென்னை மாநகராட்சி உதவி எண்களை அறிவித்துள்ளது.;

Update: 2024-10-14 15:42 GMT

கோப்புப்படம்

சென்னை,

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று வடதமிழக கடலோர பகுதியை நோக்கி அடுத்த 48 மணிநேரத்தில் நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை மிக கனமழையும், நாளை மறுநாள் (அக். 16-ம் தேதி) அதி கனமழையும் பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் வடகிழக்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளதையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இதன்படி சென்னையில் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்களை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

மழை தொடர்பான புகார், மீட்பு பணிகளுக்கு 1913 (150 இணைப்புகள்) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

கட்டுப்பாட்டு அறையை 044-25619204, 2561 9206, 25619207 ஆகிய எண்களையும் மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

chennaicorporation.gov.in இணையதளம் வாயிலாகவும், நம்ம சென்னை செயலி வாயிலாகவும், மாநகராட்சியின் சமூக வலைதள பக்கங்கள் வாயிலாகவும் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் மழை தொடர்பான புகார்களுக்கு மாவட்ட வாரியாக:-

காஞ்சிபுரம் மாவட்டம்:

ஆட்சியர் அலுவலகம் உதவி எண்: 044-27237107

வாட்ஸ்அப் : 8056221077

செங்கல்பட்டு மாவட்டம்:

பேரிடர் கட்டுப்பாட்டு மையம் உதவி எண்: 1077

மாவட்ட ஆட்சியர்அலுவலகம் உதவி எண்: 044-27427412, 044-27427414.

வாட்ஸ்அப் : 9944272345

நாகப்பட்டினம் மாவட்டம்:

கட்டுப்பாட்டு அறை எண் : 04365-1077

கட்டணமில்லா தொலைபேசி எண் : 1800-233-4233

விழுப்புரம் மாவட்டம்:

கட்டுப்பாட்டு அறை எண் : 04146 223265

தஞ்சாவூர் மாவட்டம்:

கட்டுப்பாட்டு அறை எண் : 04362-2301213

வாட்ஸ்அப் : 93450 88997

அரியலூர் மாவட்டம்:

கட்டுப்பாட்டு அறை எண் : 04329 228709

வாட்ஸ்அப் : 9384056231

திருவள்ளூர் மாவட்டம்

கட்டுப்பாட்டு அறை எண் : 044-27664177, 044-27666746

வாட்ஸ்அப் : 9444317862

தாம்பரம் மாநகராட்சி :

உதவி எண்கள் : 18004254355, 18004251600

வாட்ஸ்அப் : 8438353355

கன்னியாகுமரி மாவட்டம்:

உதவி எண்கள் : 1077 , 04652 231077

வாட்ஸ்அப் : 9384056205

Tags:    

மேலும் செய்திகள்