தமிழகத்தில் வெறுப்பு அரசியல் நடக்கிறது - பாஜக தாக்கு
நேர்மறை அரசியலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று பாஜக தெரிவித்துள்ளது.;
சென்னை,
தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசியலில் தற்போது, கட்சி பேதமின்றி மக்கள் நலத்தை பேணுவதில் கவனம் செலுத்தாமல், மக்களுக்கான உரிமைகளுக்கு குரல் கொடுக்காமல், மோசமான தனிநபர் துதி பாடும் அரசியலும், வெறுப்பு அரசியலும் நடந்து வருகிறது.
புதிதாக அரசியலில் ஈடுபடக்கூடிய இளைய சமுதாயத்தை தவறான முறையில் வழி நடத்துவது, தமிழுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டிற்கும் நாம் செய்யும் துரோகம் என்பதை அனைத்து அரசியல் கட்சிகள் உணர வேண்டும். துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியிலும், ஆட்சியிலும், அரசியலிலும் நேர்மறை அரசியலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கற்றுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.