கோவையில் 5-வது வாரமாக களைகட்டிய 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி
கோவையில் 5-வது வாரமாக 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி களைகட்டியது.
கோவை,
போலீசார் மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' (மகிழ்ச்சி தெரு) என்ற கொண்டாட்ட நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 5-வது வாரமாக இன்று 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆடல், பாடல் என களைகட்டிய 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சியில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.
தமிழ் என்ற இளைஞர் ஹிப் ஹாப் இசையில் சங்க தமிழர்களின் வரலாற்றைப் பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பல்வேறு நடனக் கலைஞர்கள் நிகழ்த்திய நடன நிகழ்ச்சிகளை பொதுமக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.