திண்டுக்கல்: 207 கிலோ குட்கா பறிமுதல் - ஒருவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் 207 கிலோ குட்கா போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2024-12-29 13:45 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் குட்கா போதைப்பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது கோமணாம்பட்டியில் உள்ள மாந்தோப்பில், 27 மூட்டைகளில் குட்கா பதுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சுமார் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 207 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை கடைகளுக்கு சப்ளை செய்து வந்த சித்திரையன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Full View
Tags:    

மேலும் செய்திகள்