தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டிடத்தில் விரிசல்

தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதால் பணியில் இருந்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர்.

Update: 2024-10-24 06:34 GMT

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று காலையில் நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதாகவும் தகவல் பரவியது.

இதையடுத்து நாமக்கல் கவிஞர் மாளிகையில் பணியில் இருந்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர். இதனால் தலைமைச் செயலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் வெளியே வந்த ஊழியர்களிடம் நில அதிர்வு எதுவும் ஏற்படவில்லை; அது வெறும் வதந்தி. முதல் தளத்தில் உள்ள ஒரு டைல்ஸில் மட்டுமே விரிசல் ஏற்பட்டுள்ளது; வேறு எந்த பிரச்சினையும் இல்லை உள்ளே செல்லுங்கள் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

இந்த நிலையில் டைல்ஸ் சேதமடைந்த இடத்தை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்டிடத்தின் உறுதித்தன்மை உருக்குலையவில்லை. கட்டடம் உறுதியாக உள்ளது. அச்சப்பட வேண்டாம். டைல்ஸ் 14 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அதனால் அது சேதமடைந்துள்ளது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்