பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பலூன் திருவிழா

கடந்தாண்டு நடந்த பலூன் திருவிழாவில் 11 நாடுகள் பங்கு கொண்டன.;

Update:2024-11-12 09:49 IST

சென்னை,

உலகின் பல்வேறு நாடுகளில் பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை ஆந்திராவின் அரக்கு வேலி மற்றும் தமிழகத்தில் பொள்ளாச்சியில் பலூன் திருவிழா நடத்தப்படுகிறது.

பொள்ளாச்சி பலூன் திருவிழாவிற்கு சர்வதேச அங்கீகாரம் உண்டு. கடந்த 2015-ம் ஆண்டு முதல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அங்கு சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு நடந்த பலூன் திருவிழாவில் 11 நாடுகள் பங்கு கொண்டன.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் 10-ந்தேதி முதல் 19-ந்தேதி சென்னை, கோவை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் பலூன் திருவிழா நடத்தப்பட உள்ளது. சென்னையில் எங்கு நடைபெறும் என்பது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பகுதியிலும் எப்போது பலூன் திருவிழா நடைபெறும் தேதியை தமிழக அரசு விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பலூன் திருவிழாவிற்கான டீசரும் https://youtu.be/Bu2p8YVN3gQ வெளியிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்