பொதுஇடங்களில் குப்பை கொட்டுவதை கண்காணிக்க களமிறக்கப்படும் ஏ.ஐ. கேமரா
சென்னையில் ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் 'சிசிடிவி' கேமரா விரைவில் அமைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
விதிகளை மீறி குப்பை கொட்டுவதை, ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்க முடிவு செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அறிக்கையில், "விதிமீறி குப்பைகளை கொட்டுபவர்கள், எரிப்பவர்களுக்கு டிஜிட்டல் முறையில் ஸ்பாட் பைன் விதிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறி குப்பை கொட்டியவர்களிடம் இருந்து இதுவரை ரூ. 17.96 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2.25 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. புதிய முன்னெடுப்பை கண்காணிக்க மண்டல வாரியாக குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.