பெண் அரசு ஊழியரிடம் வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றிய வாலிபர்... விழுப்புரத்தில் பரபரப்பு

வீடியோ கால் விஷயத்தில் உஷாராக இருக்குமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2025-02-17 09:09 IST
பெண் அரசு ஊழியரிடம் வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றிய வாலிபர்... விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த சுமார் 32 வயது பெண் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் குடும்பத்தோடு வீட்டில் இருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு வாட்ஸ்-அப்பில் வீடியோ கால் ஒன்று வந்தது. அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து அழைப்பு வந்ததால், அதனை துண்டித்துவிட்டார். மீண்டும் மீண்டும் வீடியோ கால் வந்துள்ளது. இதையடுத்து ஆன் செய்த அந்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

வீடியோ காலில் தோன்றிய வாலிபர் ஒருவர், திடீரென்று தன்னுடைய ஆடைகளை கழட்டி நிர்வாணமாக நின்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டு கணவரிடம் செல்போனை காண்பித்தார். உடனே எதிர்முனையில் இருந்த நபர் வீடியோ காலை துண்டித்துவிட்டார். இப்படி ஒரு சம்பவத்தை எதிர்பார்க்காத பெண் அரசு ஊழியர் மற்றும் அவரது கணவர் இது தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து பெண்ணுக்கு வீடியோ காலில் வந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, அந்த சிம்கார்டு மராட்டிய மாநிலத்தில் வாங்கியதும், வாட்ஸ் அப் திரையில் பிரபல இந்தி நடிகை ஒருவரின் புகைப்படம் இருப்பதும் தெரியவந்தது. மேலும் அது ஒரு மோசடியான அழைப்பு என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி நிர்வாணமாக தோன்றிய மர்மநபர் யார் என்று கண்டுபிடிக்க விழுப்புரம் சைபர் கிரைம் போலீசாருக்கு கோட்டக்குப்பம் போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். பெண்களின் செல்போனில் நிர்வாணமாக தோன்றி, அதனை பதிவு செய்து, அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் இந்த வீடியோ கால் வந்துள்ளது. எனவே பெண்கள் இதுபோன்ற வீடியோ கால் விஷயத்தில் உஷாராக இருக்குமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்