15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காடு அருகே சித்தன் காத்திருப்பு பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி மகன் கல்யாணசுந்தரம் என்கிற வைரவேல். இவர், கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ந் தேதி 10-ம் வகுப்பு படித்த 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் காயமடைந்த சிறுமி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருவெண்காடு போலீசார் போக்சோ மற்றும் கொலை வழக்குப்பதிவு செய்து வைரவேலை கைது செய்தனர். இந்த வழக்கு மயிலாடுதுறை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது.
நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் சிறுமியை கொலை செய்த வைரவேலுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராத தொகையும் விதித்து மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து போலீசார் வைரவேலை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.