அரசு பஸ்சில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதை ஆசாமி
அரசு பஸ்சில் பெண்ணுக்கு போதை ஆசாமி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
நெல்லை,
நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு தினமும் அதிகாலையில் இருந்து இரவு வரை ஒன் டூ ஒன் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி வந்த ஒன் டூ ஒன் பஸ்சில் மது போதையில் ஒருவர் ஏறியதாக கூறப்படுகிறது.
அந்த போதை ஆசாமி பஸ்சில் தனக்கு முன் இருக்கையில் இருந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். இதனை அறிந்த சக பயணிகள் அந்த நபருக்கு தர்மஅடி கொடுத்தனர்.
பின்னர் அவர்கள் மதியம் 12.30 மணிக்கு நெல்லை புதிய பஸ்நிலையத்தில் வந்து இறங்கினர். அவர்கள் அங்குள்ள போலீசாரிடம் போதை ஆசாமியை ஒப்படைத்துவிட்டு சென்றனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நெல்லையை சோ்ந்த கூலி தொழிலாளி என்பதும், அவர் அதிக போதையில் இருந்ததும் தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.