30-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

Update:2024-12-30 09:29 IST
Live Updates - Page 2
2024-12-30 10:26 GMT

இந்தியா தோல்வி.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நிகழ்ந்த மாற்றம் என்ன..?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா கூடுதல் புள்ளிகள் பெற்ற நிலையில் 2-வது இடத்தில் நீடிக்கிறது. தோல்வியடைந்த இந்தியா சில புள்ளிகளை இழந்த நிலையில் 3-வது இடத்தில் தொடருகிறது. மற்ற அணிகள் மாற்றமின்றி தொடருகின்றன.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் பின்வருமாறு:-

1. தென் ஆப்பிரிக்கா - 66. 67 சதவீதம்

2. ஆஸ்திரேலியா - 61.46 சதவீதம்

3. இந்தியா - 52.78 சதவீதம்

4. நியூசிலாந்து - 48.21 சதவீதம்

5. இலங்கை - 45.45 சதவீதம்

6. இங்கிலாந்து - 43.18 சதவீதம் 

7.வங்காளதேசம் - 31.25 சதவீதம்

8. பாகிஸ்தான் - 30.30 சதவீதம்

9. வெஸ்ட் இண்டீஸ் - 24.24 சதவீதம்

2024-12-30 10:00 GMT

மாலை 4 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி,

சென்னை,

திருவள்ளூர்,

காஞ்சிபுரம்,

செங்கல்பட்டு,

விழுப்புரம்,

கடலூர்,

அரியலூர்,

மயிலாடுதுறை,

நாகப்பட்டினம்,

தஞ்சாவூர்,

திருவாரூர்,

புதுக்கோட்டை,

ராமநாதபுரம்,

திருச்சி,

கரூர்,

திண்டுக்கல்,

தென்காசி,

திருநெல்வேலி,

கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள்

மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் 

2024-12-30 09:33 GMT

மாணவி வன்கொடுமை விவகாரம்: எப்.ஐ.ஆர். கசிந்தது தொடர்பாக தேசிய தகவல் மையம் பதில்

IPC-ல் இருந்து BNS குற்றவியல் சட்டத்திற்கு மாறுவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் எ.ஐ.ஆர். கசிந்ததாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தநிலையில், தேசிய தகவல் மையம் அதற்கு பதில் அளித்துள்ளது.

அதன்படி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் வழக்கில் பதியப்பட்ட எப்.ஐ.ஆர். எப்படி வெளியானது என்பதை ஆய்வு செய்து வருவதாக தேசிய தகவல் மையம்( NIC) தெரிவித்துள்ளது.

2024-12-30 09:09 GMT

திருக்குறள் புத்தகத்தை கவர்னருக்கு பரிசாக வழங்கிய த.வெ.க. தலைவர் விஜய்

கவர்னர் மாளிகைக்கு இன்று சென்ற த.வெ.க. தலைவர் விஜய், கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்தார். அப்போது விஜய், கவர்னர் ஆர்.என். ரவிக்கு திருக்குறள் புத்தகங்களை பரிசாக வழங்கினார். அவற்றை கவர்னர் ஆர்.என். ரவி இன்முகத்தோடு பெற்று கொண்டார். இதனையடுத்து கவர்னர் ஆர்.என். ரவி, பாரதியார் கவிதை புத்தகங்களை த.வெ.க. தலைவர் விஜய்க்கு பரிசாக கொடுத்தார்.

இதனை தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கவர்னரிடம் கோரிக்கை வைத்தார்.

மேலும் பெஞ்சல் புயலுக்கு மாநில அரசு கேட்கும் நிவாரண தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என்றும், அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கவர்னரிடம் மனு அளித்தனர்.

2024-12-30 08:57 GMT

பாலியல் வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுதாக்கல்


அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்,

2024-12-30 07:57 GMT

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - கவர்னரிடம் தவெக தலைவர் விஜய் மனு

தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என். ரவியிடம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மனு அளித்துள்ளார்.




 


2024-12-30 07:34 GMT

கவர்னர் ஆர்.என்.ரவியுடன் விஜய் சந்திப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை த.வெ.க. தலைவர் விஜய் இன்று சந்தித்து பேசினார். அப்போது 3 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவையும் விஜய் அளித்தார்.

2024-12-30 07:33 GMT

பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்