04-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

Update:2025-01-04 09:45 IST
Live Updates - Page 3
2025-01-04 07:19 GMT

சிட்னி டெஸ்ட்: 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்துள்ளது. 2வது இன்னிங்சில் இந்திய அணி 145 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

2025-01-04 07:09 GMT

விருதுநகர் பட்டாசு விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரண நிதி

விருதுநகர் பட்டாசு விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேவேளை, பட்டாசு விபத்தில் காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 1 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

2025-01-04 04:59 GMT

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 6 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

2025-01-04 04:58 GMT

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.57,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.7,215-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.99-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2025-01-04 04:56 GMT

தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தச்சங்குறிச்சியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. புனித வின்னேற்பு அன்னை ஆலய திருவிழா மற்றும் புத்தாண்டையொட்டி இந்த ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடத்தப்படுகிறது.

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தொடங்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 காளைகளும், 320 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்