'விமர்சனம் செய்வதற்கு முன் திருமாவளவன் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்' - எல்.முருகன்

பிற கட்சிகளை விமர்சனம் செய்வதற்கு முன் திருமாவளவன் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.;

Update:2024-09-15 21:23 IST

மதுரை,

மதுரை மாவட்டம் மேலூரில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"பிற கட்சிகளை சாதி அமைப்பு, மத அமைப்பு என்று விமர்சிப்பதற்கு முன்னால், திருமாவளவன் எப்படிப்பட்ட கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை சிந்திக்க வேண்டும். ஒட்டுமொத்த தலித் மக்களுக்கான கட்சியையோ, அல்லது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கான கட்சியையோ அவர் நடத்தவில்லை.

அவர் ஒரு குறிப்பிட்ட சாதியின் கட்சித் தலைவராக இருந்து கொண்டிருக்கிறார். அவ்வாறு இருக்கையில், அவர் பிறரை விமர்சிப்பது கேலிக்கையாக இருக்கிறது. பிற கட்சிகளை விமர்சனம் செய்வதற்கு முன்னால் திருமாவளவன் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்."

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்