தமிழக வெற்றிக் கழக மாநாடு: இறுதிக்கட்ட பணிகள் மும்முரம்

விக்கிரவாண்டியில் வருகிற 23-ந் தேதி விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Update: 2024-09-01 06:53 GMT

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் அதிகாரப்பூர்வ கொடியை அறிமுகம் செய்த விஜய், கட்சி கொடிக்கான விளக்கம், கட்சியின் கொள்கைகள், திட்டங்கள் குறித்து முதல் மாநாட்டில் தெரிவிப்பதாக கூறினார்.

இதனிடையே தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை மிக பிரமாண்டமான முறையில் நடத்த கட்சியினர் முடிவு செய்தனர். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்தனர்.

இதையடுத்து விக்கிரவாண்டி வி.சாலையில் வருகிற 23-ந் தேதி (திங்கட்கிழமை) விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை நடத்த திட்டமிட்டு அதற்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு கடந்த 28-ந் தேதியன்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் மனு அளிக்கப்பட்டது. மனு கொடுத்து 5 நாட்கள் ஆகியும் மாநாட்டுக்கான அனுமதி வழங்குவதில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் மவுனம் காத்து வருகிறது.

இந்த நிலையில், விழுப்புரம் விக்கிரவாண்டியில் வருகிற 23-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. த.வெ.க.வின் மாநாட்டை முன்னிட்டு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் 4 பொறுப்பாளர்கள் நியமிக்க உள்ளதாகவும் மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் கொள்கைகள் குறித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்