சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கும் மழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Update: 2024-06-18 16:25 GMT

சென்னை,

சென்னையில் கடந்த ஓரிரு நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. கடந்த ஞாயிற்றுகிழமை நகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தது. அதேபோல், இன்று அதிகாலையும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, அரும்பாக்கம், கோயம்பேடு, முகப்பேர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், அயனாவரம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி, அம்பத்தூர், அனகாபுத்தூர் பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்