தமிழக காவல் அதிகாரிகள் 23 பேருக்கு ஜனாதிபதி விருது

சுதந்திரதின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது

Update: 2024-08-14 05:10 GMT

சென்னை,

நாட்டின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த 23 காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகச் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கான ஜனாதிபதி விருது தமிழகத்தில் 2 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் மெச்சத்தக்க சேவைக்கான விருது தமிழகத்தில் 21 காவல் அதிகாரிகளுக்குஅறிவிக்கப்பட்டுள்ளது. ஐஜி கண்ணன், ஐஜி பாபு, காவல் ஆணையர் பிரவீன் குமார், டிஎஸ்பி மனோகரன், டிஎஸ்பி டில்லி பாபு, , டிஎஸ்பி சங்கு, ஏஎஸ்பி ஸ்டீபன், காவல் ஆய்வாளர் சந்திரசேகர் உள்ளிட்டோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்