விஷ சாராயம்: 30 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்

கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து சிகிச்சையில் உள்ளவர்களில் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-21 03:46 GMT

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை முதல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதை அருந்தியவர்கள் இரவு உடல் நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஏற்கெனவே 42 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 49 ஆக அதிகரித்தது. மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட 165 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 47 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்