பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பயணிக்கலாம் என அறிவிப்பு

தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.;

Update:2024-05-29 05:45 IST

கோப்புப்படம் 

சென்னை,

கோடை விடுமுறைக்கு பிறகு அடுத்த மாதம் (ஜூன்) 6-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. எனவே அன்றைய தினமே மாணவர்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாமா? அல்லது புதிய பாஸ் தரும் வரை டிக்கெட் எடுக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து போக்குவரத்து கழகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "அரசு பஸ்களில் மாணவர்களிடம் பஸ் பாஸ் கேட்க மாட்டோம். பழைய பஸ் பாஸ் மூலம் பயணிக்கலாம். அவர்கள் சீருடை அணிந்து இருந்தாலே இலவசமாக பயணிக்கலாம். இந்த ஆண்டு மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்காக கல்வித்துறையில் இருந்து மாணவர்களின் விவரங்கள் பெற்று ஆன்லைன் மூலம் புதிய பாஸ் விரைந்து வழங்கப்படும்" என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்