செய்திகள் சில வரிகளில்......

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

Update: 2024-09-27 11:33 GMT

சென்னை,

* பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று டெல்லி பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து பேசினார் .

* மினி பஸ் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்கள் உட்பட 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

* முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார்.

* அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர புதிய சட்டத்தை கொண்டு வரப்போவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

* நாமக்கல் அருகே நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரி மடக்கி பிடித்த போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கொள்ளையனை போலீசார் சுட்டுக்கொலை செய்தனர்.

* ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக்க வேண்டும் என இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

* ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட ஆஜரானார்.

* சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் இன்று பதவியேற்றார்.

* சென்னை துறைமுகத்தில் ரூ.110 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டன.

* இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதியில் ரத்து

செய்யப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்