செய்திகள் சில வரிகளில்......

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.;

Update:2024-09-26 17:03 IST

சென்னை,

* எஸ்றா சற்குணம் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

* பள்ளிக்கல்வித்துறை, மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி கேட்டு பிரதமரை சந்திக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.

* பீகாரில் புனித நீராடும் பண்டிகையில் பலியான 43 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என முதல்-மந்திரி நிதிஷ் குமார் அறிவித்து உள்ளார்.

* பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.

* தமிழக மீனவர்களை அச்சுறுத்த இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

* காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

* ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் வருகிற அக்டோபர் இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் கூறியுள்ளார்.

* ரஷியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்திவிட முடியாது என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

* லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், சிரியா நாட்டின் 23 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.

*  பாஜக தலைவர் கீர்த்தி சோமையாவின் மனைவி தொடர்ந்த அவதூறு வழக்கில் சிவசேனா (உத்தவ்) கட்சி எம்.பி சஞ்சய் ராவத்திற்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்