இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது.;
சென்னை,
மொகரம் பண்டிகையை ஒட்டி இன்று (ஜூலை 17) சனிக்கிழமை அட்டவணைப் படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, நெரிசல் மிகு நேரமான காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும்.அதேபோல, அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.