முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி - பிரேமலதா குற்றச்சாட்டு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வியிலேயே முடிந்துள்ளது என தே.மு.திக. பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்
சென்னை,
கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் கட்சியின் 20-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது.இதில் தே.மு.திக. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விஜயகாந்த் சிலை மற்றும் கேப்டன் கோவில் பெயர் பலகை ஆகியவற்றையும் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா கூறியதாவது ,
விஜயகாந்த் இல்லாமல் நடைபெறும் ஆண்டு விழாவில் கொடியேற்றி இருப்பது வருத்தமாக உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வியிலேயே முடிந்துள்ளது. முதலீடுகளை ஈர்த்தது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் யதார்த்தமாக பேசியதும் மன்னிப்பு கேட்டதும் பெரிதாக்கப்பட்டுள்ளது. இதனை தி.மு.க.வும், காங்கிரசும் சாதமாக்கியுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.