சுதந்திர தினம்: 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் - தமிழக அரசு அறிவிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Update: 2024-08-14 11:28 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட 10 காவல்துறை அதிகாரிகள் 2024-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்-அமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணிப் பதக்கங்கள் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

காவல்துறை அதிகாரிகள் விவரம்:-

* கி.புனிதா, காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் காவல் நிலையம், வேலூர் மாவட்டம்

* து. வினோத்குமார், காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, சென்னை.

* ச.செளமியா, காவல் துணை கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, கடலூர் மாவட்டம்.

* ஐ.சொர்ணவள்ளி, காவல்ஆய்வாளர், சைபர் கிரைம் காவல் நிலையம், திருப்பூர் மாநகரம்.

* நா. பார்வதி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்.

* பெ.ராதா, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, திருப்பூர்.

* செ.புகழேந்தி கணேஷ், காவல் துணை கண்காணிப்பாளர், செங்கல்பட்டு உட்கோட்டம், செங்கல்பட்டு மாவட்டம்.

* இரா.தெய்வராணி, காவல் ஆய்வாளர், பெருந்துறை காவல் வட்டம், ஈரோடு மாவட்டம்.

* ஆ. அன்பரசி, காவல் ஆய்வாளர், பொன்னை காவல் நிலையம், வேலுார் மாவட்டம்.

* நா.சுரேஷ், துணை காவல் கண்காணிப்பாளர், ஊரக உட்கோட்டம், தூத்துக்குடி மாவட்டம்.

இதேபோன்று பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2024-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்-அமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படும்:-

* தா.ச. அன்பு. இ.கா.ப., காவல் துறை தலைவர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுதுறை, சென்னை.

* இ.கார்த்திக், இ.க.பா., காவல் கண்காணிப்பாளர்-1,தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, சென்னை.

* சி.ர.பூபதிராஜன், துணைக் காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப்பபுலனாய்வுத் துறை, சேலம் சரகம்.

* க.சீனிவாசன், காவல் ஆய்வாளர் (தொ.நு.), காவல் தொலைத்தொடர்பு பிரிவு, சென்னை.

* பு.வ. முபைதுல்லாஹ், காவல் உதவி ஆய்வாளர், உள்வட்ட பாதுகாப்பு பிரிவு, அயல்பணி திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு, தலைமையகம், சென்னை.

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகள் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்