காந்தி ஜெயந்தி : ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும்;
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 02-10-2024 இன்று ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும். இதன்படி மெட்ரோ ரெயில்கள் அதன் சேவை நேரங்களில் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை பின்வரும் நேரங்களில் இயங்கும் . பிற்பகல் 12:00 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் . மேலும் நெரிசல் இல்லாத நேரங்களில் காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையும், இரவு 8 மணி முதல் இரவு 10மணி வரை ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயங்கும்
மேலும் நீட்டிக்கப்பட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் இரவு 10 மணி முதல் 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் 15 நிமிட இடைவெளியில் இயங்கும் . இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது