இயக்குனர் மோகன் ஜி ஜாமீனில் விடுவிப்பு

இயக்குநர் மோகன் ஜி-யை ஜாமீனில் விடுவித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

Update: 2024-09-24 15:08 GMT

சென்னை,

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து திரவுபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம் தொடர்பாக மோகன் ஜி சர்ச்சைக்குரிய கருத்தினை கூறியதாக கூறப்படுகிறது. மோகன் ஜி பேசிய வீடியோ வைரலான நிலையில் இயக்குநர் மோகன் ஜியின் சர்ச்சை பேச்சு தொடர்பாக பழனி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை காசிமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து மோகன் ஜி இன்று காலை கைது செய்யப்பட்டார். திருச்சியில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் மோகன் ஜி-யை கைது செய்தனர். மேலும் அவர் மீது சமயபுரம் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்துகளை பரப்பி கைதான திரைப்பட இயக்குனர் மோகன் ஜி திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், இயக்குநர் மோகன் ஜி-யை நீதிமன்ற ஜாமீனில் விடுவித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றமும், அதற்காக பதியப்பட்ட வழக்கும் சரியானது. இந்த வழக்கில் கைது செய்வதற்கான முகாந்திரம் இருந்தாலும், முறையான கைது நடவடிக்கைகளை பின்பற்றவில்லை. கைது நடவடிக்கை சட்டவிரோதமானது. எனவே அவரை சொந்த ஜாமீனில்விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்